Thursday, March 13, 2008

தொடர் கவிதை

My poem was reworded by one of my friends who is a very good tamizh writer word to word and here is the creation :)...After reading this I feel so tempted to remove my version of it...but nevertheless I will have it there just in case someone want to compare how bad a tamizh girl can get at tamizh.


என்னைக் கிடத்திப் போட்டிருக்கையில்
என்னையே கடத்தியதென் பிம்பம்.
எப்போதும் நடத்திய வேள்வி, இப்போதும்; நான் யார்?
இருக்கையில் இல்லாது போலும்,
இருக்கின்றனர் என் மக்கள்.
ஒருமையில் ஒளிய இடம் தேடுகிறேன்.
இரைதேடும் புலி கண்டு
இறைவேண்டி ஓடும் மான் போல ஓடுகிறேன்.
துரத்துவது யாரென்றறியேன்;
பயமுறுத்துவது ஏதென்றும் அறியேன்.
என்னில் என்னை ஒளித்தாலொழிய அது நடவாதென்பதும் மறந்தேன்.
உண்மை என்னைச் சுட ஒரு நாளாகுமோ? மெதுவாகத்தான் தெரிந்தது.
நிஜத்தை நேரில் சந்திப்பதுதான்
நிஜம் என்று மனம் புரிந்தேன்.
அடடா! எத்துனை நேரம் புரியாமல் தவித்தேன்.
ஒருவேளை இதுதான் எங்கள் முதல் சந்திப்போ?
மனமொன்று கூற, மதியொன்றுரைக்க
நிஜத்திற்கு பொய் (ச்) சாட்சி சொல்லியபடி
என் மனைவியை நெருங்கினேன்.
பேதைப்பெண்ணோ என் பிம்பம் பார்த்து
கதைத்துக்கொண்டிருந்தாள்.
எனைப்பார்த்து அழும் விழிக்கு
அணைபோட நான் முயல
முடியாமல்தான் கலங்க
கண்ணீர் அவள் கண்ணம் கரைத்துக்கொண்டிருந்தது.
எதிரியும் புகழ்பாட,
எரிதிரியும் சில்லென்றிருக்க
அப்போதுணர்ந்தேன்
அகில உறவை அறுத்துவிட்டேனென்று!

4 comments:

Girl of Destiny said...

awesome! nice wordplay too!

some thoughts i'm not able to understand.. can you explain..?

//ஒருமையில் ஒளிய இடம் தேடுகிறேன்//
apdina?

//கண்ணம்//
do check this... i'm guessin it should be கன்னம்??

tamizh said...

//எப்போதும் நடத்திய வேள்வி, இப்போதும்; நான் யார்?//


//ஒருமையில் ஒளிய இடம் தேடுகிறேன்.//

இந்த இரு கருத்தும் உங்களுடையதுதானா? இரண்டாம் கருத்தை நான் எடுத்துக்கொண்ட விதத்தில், என்னைப்போல் ஒருத்தியை உணர்வதுபோல் எனக்கு தோன்றுகிறது!

ராமகிருஷ்ணன் ராஜகோபாலன் said...

//எப்போதும் நடத்திய வேள்வி, இப்போதும்; நான் யார்?//

//ஒருமையில் ஒளிய இடம் தேடுகிறேன்.//

அவை இரண்டும் என்னுடைய கருத்துக்கள். ப்ரீத்தி எழுதியதற்கு கொஞ்சம் சுவையும், கருத்தும் கூட்ட அவ்வாறு எழுதினேன்.

நான் ஒரு பொழுதுபோக்கு எழுத்தாளன். என் எழுத்தில் சில பேருடைய வாசனை தெரிந்தால் அது நியாயமே. ஏனெனில் நான் மற்றவர்களுடைய கவிதைகளை நுகர்ந்து, அதில் ஈர்க்கப்பட்டு எழுத ஆரம்பித்தவன். இயற்கையான கவிஞன் அல்லன்.

//ஒருமையில் ஒளிய இடம் தேடுகிறேன்.//

என்னை நானாக ஒளிக்க ஒரு இடம் தேடுகிறேன். இவ்வுலகில் வாழும் வரையில் நான் நானாக இருக்கவில்லை. பல்வேறு வேடங்கள் தரித்திருக்கிறேன். பலவாறு மாறியிருக்கிறேன். நிஜமான நான் தனியாக இருக்க வேண்டுகிறேன். அது என்னில் என்னை ஒளித்தால் ஒழிய நடக்காது. மீண்டும் இந்த உலகில் சேர்ந்தால் நான் நானாக இருக்க மாட்டேன்.

priti said...

Yeah ...I dint have anything to do with this...It was completely my friend's work and looks like he has clarified his stand too :)